ஏற்காட்டில் அதிக மாத்திரைகளை தின்று தொழிலாளி தற்கொலை

51பார்த்தது
ஏற்காட்டில் அதிக மாத்திரைகளை தின்று தொழிலாளி தற்கொலை
சேலம் மாவட்டம் ஏற்காடு பட்டிபாடி வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). தொழிலாளி. இவர் அதிக அளவில் மாத்திரைகளை உட்கொண்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.