ஏற்காடு கோடை விழா நேற்று தொடங்கியது

552பார்த்தது
ஏற்காட்டில் 49-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் இளம்பகவத் ஏற்காடு அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மலர் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். குழந்தைகளைக் கவரும் வகையில் 45 ஆயிரம் ரோஜாக்களால் டெடிபியர் பொம்மை, விவசாயி உழவு, மாடு கன்று, ஆடு, சேவல், கோழி, முயல், வாத்து, பண்ணை வீடு போன்ற பூக்களால் ஆன உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், 30 ஆயிரம் ரோஜாக்களால் கற்பனை தேவதை, 15 ஆயிரம் ரோஜாக்களால் பரதநாட்டிய மங்கைகள், புளூட்டோ, கூபி போன்ற கார்ட்டூன் வடிவங்களும் பார்வையாளர்களைக் கவர்ந்தன.

தொடர்புடைய செய்தி