சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் 49-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்கி, தொடர்ந்து 28-ந்தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. ஏற்காடு அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி, பழ கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. வண்ண மலர்களைக் கொண்டு பல்வேறு கலை நயம் மிக்க வடிவமைப்புகள் பொதுமக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன.