ஏற்காடு கோடை விழா நாளை தொடங்குகிறது கலெக்டர் இளம்பகவத் ஆய்வு

581பார்த்தது
ஏற்காடு கோடை விழா நாளை தொடங்குகிறது கலெக்டர் இளம்பகவத் ஆய்வு
ஏற்காட்டில் 49-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி நாளை தொடங்கி, தொடர்ந்து 28-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் இளம்பகவத் ஆய்வு செய்தார். சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும், 'விவசாயம் காப்போம்' என்ற கருத்தை மையமாக வைத்து, காளை மாடு, கன்றுக்குட்டி, கறவை பசு, முயல், வாத்து, ஆடு, நாய் போன்ற விலங்குகள் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி