காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேஷ் குமார் (21), ஏற்காடு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். நேற்று இரவு 9.30 மணியளவில் முருகேஷ் குமார் போனை எடுக்காததால் அவரது தந்தை, விடுதி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். அவர்கள் சென்று பார்த்தபோது முருகேஷ் குமார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார். ஏற்காடு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர்.