சேலம் அருகே வலசையூரைச் சேர்ந்த பாலாஜி (28) என்பவர், அயோத்தியாப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, முன்னால் சென்ற பொக்லைன் வாகன டிரைவர் திடீரென பிரேக் போட்டதால், அதன் பின்னால் இருந்த இரும்பு வாளி எதிர்பாராதவிதமாக பாலாஜி மீது மோதி படுகாயத்தை ஏற்படுத்தியது. அக்கம் பக்கத்தினர் அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.