Jan 19, 2026, 01:01 IST/
ஈரானில் 15,000 பேர் பலி?.. வெளியாக அதிர்ச்சி தகவல்
Jan 19, 2026, 01:01 IST
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.