தென் கொரியாவின் ஆசன் நகரில் நடைபெற்ற கொரிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா சாம்பியன் பட்டம் வென்றார். சீன வீராங்கனை ஹான் குவாங்சியை எதிர்கொண்ட அவர், முதல் செட்டை 14-21 என இழந்தார். பின்னர் சிறப்பாக விளையாடி 21-14, 21-14 என அடுத்த இரு செட்களையும் கைப்பற்றி வெற்றி பெற்றார். உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு போட்டியில் சாலிஹா வென்ற முதல் பட்டம் இதுவாகும்.