மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றிலிருந்து வெளியேறிய நடிகர் சல்மான் கானை அங்கிருந்த புகைப்பட கலைஞர்கள் சூழ்ந்து கொண்டு சத்தம் போட்டதால் அவர் கடும் கோபமடைந்தார். "எனக்கு 60 வயதாகிவிட்டாலும் இன்னும் சண்டை போட மறந்துவிடவில்லை" என்று எச்சரித்த சல்மான் கான், தனது வலியை வைத்து ஊடகங்கள் பிழைப்பு நடத்த கூடாது என சமூக வலைத்தள பக்கத்திலும் கடுமையாக சாடியுள்ளார்.