தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய சிறைத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் விரைவில் பொறுப்பேற்க உள்ளார். மேலும், இதுவரை சிறைத்துறை டிஜிபியாக பணியாற்றி வந்த சங்கர், தற்போது குற்றப்புலனாய்வுத்துறை (சிபிசிஐடி) ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.