சென்னை: சோழிங்கநல்லூரில் பொது கழிப்பிடத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பச்சிளம் குழந்தையை தூய்மைப் பணியாளர்கள் மீட்டுள்ளனர். குழந்தையின் குரலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, குழந்தையின் பெற்றோர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.