பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தூய்மை பணியாளர்கள் மீண்டும் தங்கள் போராட்டத்தை இன்று (ஆக.1) தொடங்கியுள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையை முற்றுகையிடுவதற்காக தூய்மை பணியாளர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது, வழியிலேயே அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அவர்களின் கோரிக்கைகள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.