மதுரை தமுக்கம் மாநாட்டு மையத்தில் மகளிர் திட்டம் சார்பில், ஊரக கைவினைஞா்கள் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி (சரஸ்) மற்றும் உணவுத் திருவிழா நேற்று (நவ.22) தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற இதே கண்காட்சியில் ரூ.1.55 கோடிக்கும் அதிகமான பொருள்கள் விற்பனையானது. இந்த நிலையில், மதுரையில் 12 நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் அதைவிட அதிக விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.