சரத்குமாருக்கு தேசிய அளவில் பதவி.. வானதி சீனிவாசன் தகவல்

10165பார்த்தது
சரத்குமாருக்கு தேசிய அளவில் பதவி.. வானதி சீனிவாசன் தகவல்
தேர்தலுக்கு பிறகு நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமாருக்கு தேசிய அளவில் கட்சிப் பதவி கொடுக்கப்படும் என்று அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், சரத்குமார் அருமையான தலைவர். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. 5 மாநில தேர்தல் நடப்பதால் தற்போது யாருக்கும் தேசிய பதவி கொடுக்க முடியாது. தேர்தலுக்கு பிறகு சரத்குமாருக்கு தேசிய அளவில் பதவி கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி