தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2020ல் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் விசாரணையில் அடித்துக் கொல்லப்பட்டனர். இதுகுறித்த வழக்கில், 9 போலீசார் குற்றவாளிகள் என மதுரை நீதிமன்றம் கடந்த 23ம் தேதி தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனை இன்று (ஏப்.6) வாசிக்கப்பட்டது. அப்போது, “பழிவாங்கும் நோக்குடன் பென்னிக்ஸ், ஜெயராஜ் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்” என நீதிபதி முத்துக்குமரன் கூறியுள்ளார். மேலும், ‘குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதே சரியானது’ என கூறியுள்ளார்.