மராட்டிய மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான 5% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு விட்டதாக குற்றஞ்சாட்டி, முதலமைச்சர் ஸ்டாலின், சமூகநீதிக் காவலர் வேடம் போடுவதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல், வன்னியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10.50% உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு காரணமான மு.க.ஸ்டாலின் சமூகநீதி பேசுவது சாத்தான்கள் வேதம் ஓதுவதற்கு ஒப்பானது” என்றார்.