சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அலுவல் பணிக்காக சென்ற நிலையில், தவெக திருப்பூர் வடக்கு எம்எல்ஏ சத்யபாமா, சபாநாயகர் பொறுப்பை ஏற்று அவையை வழிநடத்தினார். தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்துள்ளார். இதனை வரவேற்ற
திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு, லேடி வெலிங்டன் அவர்கள் இந்த சட்டமன்றத்திற்கு வழங்கிய ஆசனம், ஒரு பெண் அமர வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பு. மாற்றுத் தலைவராக நீங்கள் அமர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பாராட்டினார்.