நாடாளுமன்றத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் கொடுத்த தரவுகளின்படி, 2021-2025 வரை தமிழகத்தில் பதிவான போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 39,999ஆக உள்ளது. இதுகுறித்து அண்ணாமலை கூறுகையில், “நான் பேசும்போது 39,900 வழக்குகள் என எண்ணிக்கையைக் குறைத்துக் கூறிவிட்டேன். உண்மை சரிபார்ப்பு செய்திருக்க வேண்டும். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின், இட்லிக்கு சட்னி வைத்துக் கொள்வாரா? அல்லது சாம்பாரா? என்ற அளவிலேயே தமிழகத்தில் சில உண்மை சரிபார்ப்புத் தளங்கள் இயங்குகின்றன” என்றார்.