சவுதி அரேபியாவில் 2025ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 356 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான 243 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டில் 338 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மனித உரிமை அமைப்புகள் சவுதி அரேபியாவின் மரண தண்டனை நடைமுறைகளுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றன.