கர்நாடக முன்னாள் அமைச்சரும்,
பாஜக எம்.எல்.ஏ.வுமான ஜனார்த்தன ரெட்டி பேசிய கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் வருகைப்பதிவின் போது மாணவர்கள் “YES SIR” என்பதற்கு பதிலாக “ஜெய் ஸ்ரீராம்” என்று கூற வேண்டும் என அவர் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கருத்துக்கு
அரசியல் கட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பும் ஆதரவும் எழுந்துள்ளது. கல்வி நிலையங்களில் மத கோஷங்களை கொண்டு வருவது சர்ச்சையை தூண்டியுள்ளது.