ஊழியர்கள் பற்றாக்குறையை சரி செய்ய வலியுறுத்தி மே 25, 26-ம் தேதிகளில் எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்த நாடு தழுவிய
போராட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தங்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக வங்கி நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதை அடுத்து ஊழியர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். இதனால் குறிப்பிட்ட அந்த இரண்டு நாட்களிலும் பாரத ஸ்டேட் வங்கி கிளைகள் வழக்கம் போல தடையின்றி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.