ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனை கட்டணங்கள் மாற்றம் அமல் - எஸ்பிஐ அறிவிப்பு

எஸ்பிஐ வங்கி நேற்று (பிப்.15) முதல் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டண விதிகளை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, ரூ.25 ஆயிரத்துக்குள் பணம் அனுப்பினால் சேவை கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி இல்லை. 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அனுப்பினால் 2 ரூபாய் + ஜிஎஸ்டி, ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை அனுப்பினால் 6 ரூபாய் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இந்த கட்டணங்கள் எஸ்பிஐ இண்டர்நெட் பேங்கிங், யோனோ செயலி மூலம் அனுப்பப்படும் பணப்பரிமாற்றங்களுக்கு பொருந்தும்.
