இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI), தனது வாடிக்கையாளர்கள் வரும் ஜன.15-ம் தேதிக்குள் தங்களது KYC விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, நீண்ட நாட்களாக புதுப்பிக்கப்படாத அல்லது செயலற்ற நிலையில் உள்ள வங்கி கணக்குகளை பாதுகாக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலக்கெடுவுக்குள் KYC அப்டேட் செய்யாத கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்படலாம் அல்லது பண பரிவர்த்தனைகள் நிறுத்தப்படலாம் என வங்கி எச்சரித்துள்ளது.