திருநெல்வேலியில் 'சுத்தமான நெய் அல்வா' என்ற பெயரில் வனஸ்பதி மற்றும் கடலை எண்ணெய் கலந்து அல்வா தயாரித்து விற்பனை செய்த 6 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் சீல் வைத்தனர். நெல்லையப்பர் கோவில் மற்றும் ஜங்ஷன் பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டன. பிரபல 'இருட்டுக்கடை அல்வா' கடைக்கு அருகிலேயே வாடிக்கையாளர்களைக் குழப்பும் வகையில் பெயர் பலகை வைத்திருந்த கடை மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுமார் 500 கிலோ முதல் 1 டன் வரையிலான அல்வா பறிமுதல் செய்யப்பட்டன.