அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம்

10369பார்த்தது
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம்
மத்திய அரசின் ‘பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மந்தன்’ (PM-SYM) திட்டத்தின் கீழ், 60 வயதை கடந்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சேர 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என்பதுடன், மாத வருமானம் ரூ.15,000-க்கும் குறைவாக இருப்பவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள். இதற்கான மாதாந்திர சந்தா தொகையை செலுத்தி வரும் பயனாளிகளுக்கு, 60 வயதிற்கு பின் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைப்பதுடன், தகுதியுள்ளவர்கள் பொது சேவை மையங்கள் (CSC) அல்லது https://cscspv.in/pmsym-scheme.htmlஏ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி