சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்க மத்திய அரசு “பிஎம் ராஹத்” திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கும் போது கட்டணமின்றி சிகிச்சை வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை செலவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும். விபத்து நடந்த நாள் முதல் 7 நாட்கள் வரை இந்த நிதி பாதுகாப்பு வழங்கப்படும்.