தமிழகத்தில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இது தொடர்பாக முதலமைச்சர்
விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வானிலை ஆய்வு மையம் ஜூன் 1 முதல் 4ஆம் தேதி வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும், ஜூன் 8ஆம் தேதி திறக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.