கிருஷ்ணகிரி: சந்திரசூடேஸ்வரா கோயில் விழாவை முன்னிட்டு ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களில் மார்ச் 3ஆம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது. இதனை ஈடுசெய்ய மார்ச் 14 சனிக்கிழமை அன்று வேலைநாள் என அம்மாவட்ட ஆட்சிய அறிவித்துள்ளார். ஏற்கெனவே, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி. தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.