கோடை விடுமுறைக்கு பிறகு வழக்கம் போல இன்று பள்ளிகல் தொடங்குகின்றன. 32 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் சுமார் 40 லட்சம் மாணவ மாணவியர் பள்ளிக்கு திரும்புகின்றனர். பள்ளி தொடங்கும் முதல்நாளான இன்றே, மாணவர்களுக்கு சீருடைகள், பாடப்புத்தகங்கள் நோட்டுகள் வழங்கப்பட உள்ளன. அதேபோல், பள்ளித் திறப்பையொட்டி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட வழிகாட்டுதல்களை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பிற்கு தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களுமே பொறுப்பு எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.