தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் கடந்த ஏப்ரல் 17ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. ஜூன் 1ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் மேலும் 3 நாட்கள் பள்ளி திறப்பை கல்வித்துறை தள்ளி வைத்தது. இந்நிலையில், தமிழக முழுவதும் அனைத்து பள்ளிகளும் இன்று (ஜூன்.04) திறக்கப்படுகிறது. மாணவர்களின் வருகைக்காக பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.