பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் தவெக அரசு விஞ்ஞான ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 2021-ல் அதிமுக ஆட்சியில் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.2,044 கோடி மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றார். 5 ஏக்கருக்குக் கீழ் உள்ளோருக்கு முழுத் தள்ளுபடி என்ற வாக்குறுதியை மீறி, நிலத்திற்குப் பதில் பணத்தை அளவுகோலாக வைத்து விவசாயிகளை ஏமாற்றிய அரசு நிலைத்ததாகச் சரித்திரம் இல்லை என்றும் அவர் சாடியுள்ளார்.