பூமியில் இருந்து சுமார் 146 ஒளி ஆண்டுகள் தொலைவில் 'எச்.டி 137010 பி' என்ற புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நாசாவின் அதிநவீன விண்வெளி தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்ட இந்த கிரகம், பூமியின் அளவை ஒத்திருப்பதோடு, அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சூழல் இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. குறிப்பாக, இந்த கிரகத்தில் நீர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதால், இது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.