சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் முதல் அல்லது 2ஆம் வாரம் வரை வெயில் அதிகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் வெப்பம் கடுமையாக இருக்கும் எனவும் அவர் கணித்துள்ளார். இந்நிலையில், பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், வெயிலின் தாக்கல் அதிகரித்தால், பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.