டெல்லியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இன்று (மே 27) முதல் 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் 113 பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகக்கூடும் எனவும் பலத்த தரைக்காற்று, மோசமான காற்றின் தரத்தால், தலைநகர் டெல்லியில் வெப்பம் அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், வெப்பநிலை அதிகரிப்பால், அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.