சென்னையில் உள்ள பிரபல போத்தீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.18.2 கோடி ரொக்கம் மற்றும் 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு புகாரில் நேற்று (செப்.14) மூன்றாவது நாளாக இந்த சோதனை நீடித்தது. சென்னையில் உள்ள நான்கு ஜவுளிக்கடைகளிலும், அபிராமபுரத்தில் உள்ள போத்தீஸ் உரிமையாளர் ரமேஷ் வீட்டிலும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.