தவெக வேட்பாளரின் உறவினர் வீட்டில் சோதனை.. ரூ.12 லட்சம் பறிமுதல்

28பார்த்தது
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்.23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, கடலூர் மாவட்டத்தில் தவெக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜ்குமாரின் உறவினர் புகழேந்தி என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதில், கணக்கில் வராத ரூ.12 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி