திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இழுபறி?

3154பார்த்தது
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இழுபறி?
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிக்கிறது. காங்கிரஸ் 35 முதல் 41 தொகுதிகள் வரை கேட்பதாகவும், திமுக 28 முதல் 30 தொகுதிகள் வரை கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மதிமுக 12 தொகுதிகள் வேண்டும் என அடம்பிடிப்பதாகவும், தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை தக்கவைக்க இது அவசியம் என்றும் கூறப்படுகிறது. இல்லாத பட்சம், கடந்த முறை ஒதுக்கிய 6 தொகுதிகளுடன், காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் தர வேண்டும் என மதிமுக வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி