கரூர் சம்பவம் தொடர்பாக நாளை (ஜன.12) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜராகவுள்ளார். இந்நிலையில் அவருக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். விஜய்க்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள Y பிரிவு பாதுகாப்போடு, கூடுதல் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விஜய்க்கு பாதுகாப்பு வழங்கக்கோரி தவெக கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.