நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மனைவி கயல்விழி தம்பதியருக்கு பெண்குழந்தை இன்று (மே 21) பிறந்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு திருமணம் நடந்த நிலையில், 2019ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. மாவீரன் பிரபாகரன் என அவருக்கு பெயர்சூட்டப்பட்டது. இந்த நிலையில், 7 ஆண்டுக்கு பிறகு இரண்டாவதாக தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. சீமானின் மனைவி கயல்விழி முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.