சென்னை: ‘தனியார் பெரு முதலாளிகளின் லாப நோக்கத்துக்காக, முதியோர் இல்லத்தை முடக்குவது ஏற்புடையதல்ல’ என நாதக சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “முதியோர் இல்லத்தைச் சுற்றி அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்துள்ள தனியார் நிறுவனம், முதியோர் இல்லத்தை இடித்து அதன் வழியாகக் கழிவுநீர் கால்வாய் அமைக்க முயல்கிறது. அதற்கு அமைச்சர் தா.மோ.அன்பரச துணை நிற்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.