நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக, 'மரங்களோடு பேசுவோம்! மரங்களுக்காகப் பேசுவோம்!' என்ற தலைப்பில், ஆகஸ்ட் 30ஆம் தேதி திருவள்ளூர் திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் மரங்களின் மாநாடு நடைபெறவுள்ளது. அந்த பகுதியை இன்று ஆய்வு செய்த சீமான், மரங்களுக்கு முத்தம் கொடுப்பது, மரங்களுடன் பேசுவது போன்ற காட்சிகளை ஷூட் செய்யுமாறு கேமராமேனிடன் கேட்டுக்கொண்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.