அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.. சீமான் வலியுறுத்தல்

11பார்த்தது
தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர முடியாது எனக் கூறும் கர்நாடக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டும்போது, பாதிக்கப்பட்ட நாம் ஏன் கூட்ட மறுக்கிறோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினாலே அது மத்திய அரசுக்கும் கர்நாடக அரசிற்கும் பெரும் அழுத்தத்தைக் கொடுக்கும் எனக் குறிப்பிட்ட அவர், மாநில நலனுக்காகக் கூட்டத்தைக் கூட்ட முதல்வர் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி