உளுந்து, பாசிப்பயறு, துவரை, காராமணி உள்ளிட்ட பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியை அதிகரித்து, தமிழ்நாட்டை பயறு உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்வதற்காக "பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்" 2025-26 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பயறுவகைகளை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்த ஏதுவாக பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க 33 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை 2026-27 நிதியாண்டிலும் வழங்கப்படும் என அமைச்சர் ர.வினோத் தெரிவித்துள்ளார்.