திமுக குறித்து மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்த கருத்துகள் குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார். அதில், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கே.சி. வேணுகோபால் கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு முரணாக யார் நடந்துகொண்டால் அது தவறுதான். இதுகுறித்து டெல்லியில் ஆலோசிப்போம் என கூறியுள்ளார்.