தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி ஹசினா சையத் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மேலிடம் பரிந்துரைத்தும், தமிழக காங்கிரசார் சிலரால் தனக்கு அந்த வாய்ப்பு பறிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், மாநிலத் தலைமை முறையாக செயல்படவில்லை என அவர் விமர்சித்திருந்த நிலையில், தற்போது அவர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.