தவெக உடன் கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதை விமர்சித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார். அதில், "தவெக கொடியை பார்த்ததும் கூட்டணிக்கு, பிள்ளையார் சுழி போடப்பட்டது என்று கூறினார். ஆனால் அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஒருவர் முன்னேற வேண்டும் என்றால் தன் காலிலே நடந்து செல்ல வேண்டும். பிறரின் முதுகில் ஏறி பயணம் செய்யக் கூடாது" என கூறினார்.