தவெக-வில் இணைந்த செங்கோட்டையனை அக்கட்சியினர் மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில், செங்கோட்டையனை நம்பி அவரது பின்னால் தவெக-வில் இணைந்த முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்டோருக்கு இதுவரை தவெக-வில் பொறுப்பு வழங்கவில்லை. சத்தியபாமாவுக்கு மகளிர் அணியில் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால், செங்கோட்டையன் ஆதரவாளர்கள், தேர்தல் பணியில் சுணக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.