தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தென்காசியில் இன்று (டிச.2) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விஜய் கட்சியில் இணைவதற்கு முன்னதாக செங்கோட்டையன் ஏன் சேகர்பாபுவைச் சந்தித்தார்?. அவர் சொல்லித்தான் செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார்” என விமர்சித்துள்ளார். மேலும், “ஜனவரி மாதத்திற்குப் பிறகு நல்ல கூட்டணி வந்து சேரும்” என்றார்.