அதிமுக மூத்த தலைவர் சிந்து சண்முகம் காலமானார்: இபிஎஸ் இரங்கல்

79பார்த்தது
அதிமுக மூத்த தலைவர் சிந்து சண்முகம் காலமானார்: இபிஎஸ் இரங்கல்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியின் சம்பந்தியும், கட்சியின் மூத்த தலைவருமான சிந்து சண்முகம் உடல்நலக் குறைவால் காலமானார். பவானி நகரச் செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்த சிந்து சண்முகத்தின் மறைவுக்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு செய்தி அறிந்து வேதனை அடைந்ததாகவும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து கொள்வதாகவும் இபிஎஸ் கூறியுள்ளார்.