கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது மூப்பின் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நல்லகண்ணுவிற்கு சிகிச்சைப் பெற்று வருகிறார். அங்கு, வெண்டிலேட்டர் உதவியுடன் நல்லகண்ணுவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. நல்லகண்ணுவின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.